இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; கணக்கில் வராத ரூ.4½ லட்சம் சிக்கியது


இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; கணக்கில் வராத ரூ.4½ லட்சம் சிக்கியது
x

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4½ லட்சம் சிக்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4½ லட்சம் சிக்கியது.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 6.30 மணிக்கு இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தப்பட்டது.

கட்டு, கட்டாக பணம் சிக்கியது

சோதனையில் அங்கிருந்த ஒரு அறையில் மேஜைக்குள் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் இருந்தது. அதில் மொத்தம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 800 இருந்தது. உடனே போலீசார் பணத்தை கைப்பற்றினர். இதுகுறித்து இரணியல் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வரும் சுப்பையா மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கணக்கில் வராத பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக புரோக்கர்கள் 6 பேரும் சிக்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story