போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மன்னார்குடி:
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி மன்னார்குடி காவல் கோட்டம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மன்னார்குடியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பள்ளி-கல்லூரி மற்றும் வீடுகளில் கண்காணிப்பு இருந்தால் போதை பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை காப்பாற்ற முடியும் என்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்திரகாசன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கலந்து கொண்டு போதை பொருட்களால் வரும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.