போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

செய்யாறில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பெரியார் சிலை அருகே மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாண்டியன் தலைமை தாங்கினார். செய்யாறு சரக மருந்துகள் ஆய்வாளர் இமானுவேல், திருவண்ணாமலை சரக ஆய்வாளர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அம்முகுட்டி கலந்துகொண்டு போதை பொருள் பாதிப்பு குறித்தும், டெங்கு நோய் பரவல் தடுப்பு குறித்தும் பேசினார். பின்னர் விழிப்புணர்வு ஊர்வலத்தினை தொடங்கி வைத்தார்.

பெரியார் சிலை அருகே தொடங்கிய ஊர்வலம் மார்க்கெட், காந்தி சாலை, ஆற்காடு சாலை வழியாக ஆரணி கூட்ரோடு பகுதி வரை சென்றது. இதில் ஆதிபகவான் மருந்தியல் கல்லூரி மற்றும் செய்யாறு எய்ம்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story