போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திருவாரூர், நன்னிலத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவாரூர்
திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குழந்தைகள் நல மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார். ஊர்வலத்தை மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் தொடங்கி வைத்தார். முன்னதாக போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழிகளை மாணவ-மாணவிகள் எடுத்துக்கொண்டனர். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பால வாய்க்கால் ரவுண்டானா வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியம்மாள், நாகராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருவாரூர் நகர போலீசார் சார்பில் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
நன்னிலம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நேற்று நன்னிலம் போலீசார் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் போதை பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் பஸ்நிலையத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரண்யா, நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜ், துணை தலைவர் ஆசைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.