போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
சீர்காழியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமை தாங்கினார். மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். ஊர்வலமானது கச்சேரி ரோடு, ஆஸ்பத்திரி சாலை, கடைவீதி, பிடாரி வடக்கு வீதி, ஈவேரா சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக சீர்காழி போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர். இதில் போலீஸ் துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.