போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கரூர்
கரூர் நகர உட்கோட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை கரூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது 80 அடி சாலையில் தொடங்கி மனோகரா கார்னர், ஜவகர் பஜார் வழியாக சென்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் போதையில் வரும் இன்பம் வாழ்க்கையில் வரும் துன்பம், புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும், போதை அது சாவின் பாதை, குடி நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போலீசார் மற்றும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story