போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள எம்.எம்.கோவிலூர் சி.எஸ்.எம்.ஏ. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் முகமது இஸ்மாயில், முகமது அபுபக்கர் சித்திக், இர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை விலங்கியல் ஆசிரியர் முத்துச்சாமி போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியபடி மாணவர்கள் சென்றனர். இந்த ஊர்வலம் கோவிலூர் வழியாக பெரியகோட்டையில் முடிந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.