போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
நாகப்பட்டினம்
நாகையில்நாகை மாவட்ட காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story