போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அகராதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் அருகே அகராதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கடக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். இதில் பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கணேஷ்கர் ஆகியோர் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து எடுத்துக்கூறினர். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்புக்கான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஐரின் ஜெயராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சிராணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story