போதை எதிர்ப்பு தின ஊர்வலம்


போதை எதிர்ப்பு தின ஊர்வலம்
x

தூத்துக்குடியில் போதை எதிர்ப்பு தின ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மறைமாவட்ட ஒன்றிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அகில உலக போதை எதிர்ப்பு தின பேரணி பாத்திமாநகரில் நடந்தது. பேரணிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய அனிதா தலைமை தாங்கினார். மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, பாத்திமாநகர் பங்கு நிர்வாக துணைத்தலைவர் ஆரோக்கியசாமி, தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குனர் ரெய்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக துணை மேயர் ஜெனிட்டா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் சென்ற பெண்கள் முக்கிய வீதிகளில் சென்று போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் கூட்டமைப்பை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story