முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றதோடு முழக்கங்களும் எழுப்பிச்சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் சின்னக்கடை வீதி, கண்ணாரத்தெரு, கச்சேரிரோடு வழியாக பட்டமங்கல தெருவில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.

கலெக்டர் தலைமையில் உறுதிமொழி

முன்னதாக மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கலெக்டர் மகாபாரதி பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மாவட்ட சமூக நலன் அலுவலர் சுகிர்தா தேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story