முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் ஊதா நிற விழிப்புணர்வு ரிப்பனை கட்டிக்கொண்டும், முதியோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம், முதியோர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் தட்டி கேட்போம். உழைத்து உயர்ந்த பின் பெற்றோரை உதறாதே என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். வெங்கடேசபுரம் வழியாக சென்ற ஊர்வலம் தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.


Next Story