முதியோருக்கு எதிரான கொடுங்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


முதியோருக்கு எதிரான கொடுங்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் முதியோருக்கு எதிரான கொடுங்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் முதியோர் களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அதிகாரி முத்தம்மாள், பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், பொன் ராமலிங்கம், அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா்.

முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், முதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திடவும், பொது இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்திடவும் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.


Next Story