நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் திடீர் ஆய்வு
மானூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி
நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு முறையாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதா? முறைகேடுகள் ஏதேனும் நடந்து உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2 நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த ஆய்வு நடந்தது. மேலும் முறைகேடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story