இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம்
சங்கரன்கோவிலில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் முப்புடாதி அம்மன் கோவில் அருகே உள்ள கலைஞர் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, முன்னாள் நகர செயலாளர் சங்கரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, துணைச் செயலாளர் டைட்டஸ் ஆதித்தன், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், பொருளாளர் லாசர் என்ற சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
இதில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், தனுஷ் குமார் எம்.பி., சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமா மகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, முத்தையா பாண்டியன், பூசை பாண்டியன் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றிவிஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் மாரிமுத்து, செண்பகவிநாயகம், பாலசுப்பிரமணியம், குருசாமி, புளியங்குடி நகரசபை தலைவி விஜயா, பேரூராட்சி தலைவர்கள் கோமதி, இந்திரா, பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, வேல்சாமி பாண்டியன், தேவதாஸ், மாரிசாமி, மகேஸ்வரி, சார்பு அணி அமைப்பாளர்கள் சோமசெல்வபாண்டியன், யோசேப்பு, பத்மநாதன், இளைஞர்அணி சரவணன், நகரசபை கவுன்சிலர்கள் புஷ்பம், ராஜா ஆறுமுகம், கவுசல்யா, குருப்பிரியா, முத்துமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரைபாண்டியன் நன்றி கூறினார்.