இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம்
அம்பையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
அம்பை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அம்பாசமுத்திரம் நகர தி.மு.க. சார்பில் அம்பையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஆ.பிரபாகரன் வரவேற்றார். அம்பை நகரசபை தலைவரும், நகர செயலாளருமான கே.கே.சி.பிரபாகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், மாநில பேச்சாளர் ஈரோடு இளைய கோபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் நகரசபை துணை தலைவர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பை பரணி சேகர், சேரன்மாதேவி முத்துப்பாண்டி என்ற பிரபு, சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன், மணிமுத்தாறு நகர செயலாளர் முத்து கணேசன், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.