போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரக்கோணத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரக்கோணம் ரோட்டரி சங்கம், அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை பொருள் தடுப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் கே.சதீஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.பி.ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கலந்துகொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
அரக்கோணம் எஸ்.ஆர்.கேட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பழனிபேட்டை, பஜார், பழைய பஸ் நிலையம், சுவால்பேட்டை வழியாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் வரை சென்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்தும், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பியபடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர். இதில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் பழனிராஜன், கல்லூரி முதல்வர் கவிதா, ரோட்டரி நிர்வாகிகள் மணிகண்டன், ஜெயபாபு, பி.ஆர்.முரளி, லட்சுமிபதி, மனோகர் பிரபு, கஜபதி, அ.தி.மு.க. அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.