பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சோளிங்கர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாலங்குப்பத்தில் தூய்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். காங்கிரஸ் ஒன்றிய தலைவர் கார்த்திக், செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், சமூக ஆர்வலர் சி.வெங்கடேசன், சோளிங்கர் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலாஜி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்துகொண்டு 200 வீடுகளுக்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்க குப்பை கூடைகள் வழங்கினார்.
மேலும். அங்கன்வாடி குழந்தைகள் அமர நாற்காலியும் வழங்கினார். இவை முன்னாள் ராணுவ வீரர் சி.வெங்கடேசன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
அப்போது முனிரத்தினம் எம்.எல்.ஏ.கூறுகையில், ''பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகையின் காரணமாக மூச்சுத்தினறல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரும்போது மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும்'' என்றார்.
இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.