வடமதுரை அருகே போலீசாருக்கு கலவர தடுப்பு பயிற்சி
வடமதுரை அருகே போலீசாருக்கு கலவரத்தை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வடமதுரை அருகே புத்தூர் மலைப்பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு போலீசாருக்கு அவ்வப்போது துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இன்று திண்டுக்கல் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு கலவரத்தின்போது கூட்டத்தை கையாளும் முறைகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த பயிற்சியும், ஒத்திகை கவாத்து பயிற்சியும் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை போலீஸ்காரர்களுக்கு கண்ணீர் புகை குண்டுகள் சுடுதல் மற்றும் வீசுதல் பயிற்சி, ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் கலவரத்தின் போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களை இயக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் லத்தி, தடுப்பு ஷீல்டு, ஹெல்மெட், கவச உடைகள் அணிந்து 77 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர்.