புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன், புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூக பணியாளர் மதுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.இதில் கலந்துகொண்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி சென்றனர். பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் பரமநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் டென்னிசன், நற்குணம், உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், செந்தில், ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


Next Story