புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை நீதிபதி தொடங்கி வைத்தார்
திருவையாறு
தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதியுமான மதுசூதனன் உத்தரவின்பேரிலும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியுமான சுதா வழிகாட்டுதல்படியும், புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை எதிர்ப்பு மற்றும் சட்ட உதவி குறித்து திருவையாறு பஸ் நிலையத்திலிருந்து திருவையாறு பேரூராட்சி வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருவையாறு வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்திரசேகர் தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன், திருவையாறு பேருராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம், திருவையாறு வக்கீல்கள் சங்க செயலாளர் ஆர்.எம்.ராஜ், வக்கீல்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர் சுதாகர், பேரூராட்சி துப்புரவாளர்கள் மற்றும் திருவையாறு தியாகராஜர் தொழிற்கல்வி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.