புகையிலை எதிர்ப்பு தினம்: நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் விழிப்புணர்வு
புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குன்னூர்
ஆண்டுதோறும் மே மாதம் 31-ந்தேதி புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் புகையிைல எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் மனோகரன், துணைத் தலைவர் ரமணி, செயலாளர் ஆல்துரை, இணை செயலாளர் சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் மனோகரன் கூறியதாவது:- புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோயிக்கு நாட்டில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் இறக்கிறார்கள். இது எதிர்வரும் 2035-ம் ஆண்டில் 12 லட்சம் பேராக மாறும் அபாயம் உள்ளது. பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் புகைப்பிடித்து சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.