புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறையில் நேற்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் ஜி.எஸ்.டி. - மத்திய கலால் வரி மண்டலம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பில் நடந்தது. இந்த ஊர்வலம் அவையாம்பாள்புரத்தில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து தொடங்கி பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்துக்கு ஜி.எஸ்.டி. அலுவலக கண்காணிப்பாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். இதில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஜி.எஸ்.டி. வரி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஜி.எஸ்.டி. அலுவலக ஆய்வாளர் பிரவீன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story