வள்ளியூர் அருகே 2-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் 450-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்ெடடுக்கப்பட்டன.
திருநெல்வேலி
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடந்த அகழாய்வு பணிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பழங்கால தொன்மையான ஓடுகள், குவளைகள், பாசி, மணிகள் போன்ற பல்வேறு வகையிலான 1,009 பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது 2-வது கட்டமாக கடந்த மாதம் 6-ந் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வின்போது செஸ் விளையாடும் சுடுமண்ணால் ஆன காய்கள், செம்பினால் ஆன மோதிரம், காதில் அணியும் சுடுமண்ணால் ஆன ஆபரணம், ஈட்டி முனை, பானை, பாசிகள், வேட்டையாட பயன்படுத்தும் கவுன் கல், எலும்புகள், பழங்கால கூரைவீடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்பட 450-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மேலும் தொடர்ந்து அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
Next Story