அந்தியூர் ஏரியில் மூழ்கி ஜோதிடர் சாவு


அந்தியூர்   ஏரியில் மூழ்கி ஜோதிடர் சாவு
x
தினத்தந்தி 25 Sept 2022 1:00 AM IST (Updated: 25 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஜோதிடர் சாவு

ஈரோடு

அந்தியூர் ஏரியில் மூழ்கி ஜோதிடர் இறந்தார்.

ஜோதிடர்

தஞ்சாவூர் மாவட்டம் புதூர் கிராமம் கல்யாணம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கண்ணன். ஓலைச்சுவடி ஜோதிடர். இவருடைய மகன் கார்த்தி (வயது 18).

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள மந்தை மாரியம்மன் கோவில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கண்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கண்ணன், கார்த்தி மற்றும் குடும்பத்தினர் தினமும் ஊர் ஊராக சென்று ஓலைச்சுவடி மூலம் ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.

குளிக்க சென்றார்

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அந்தியூர் பெரிய ஏரியில் குளிப்பதற்காக மோட்டார்சைக்கிளில் கார்த்தி சென்று உள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு கார்த்தி வராததால் ஏரிக்கு சென்று கண்ணன் பார்த்தார். அப்போது ஏரியின் கரையில் கார்த்தியின் மோட்டார்சைக்கிள் மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது.

சாவு

இதனால் பதறிப்போன அவர் ஏரிக்கு சென்று பார்த்தார். அப்போது ஏரியில் கார்த்தி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் கதறி அழுதார்.

இதுபற்றிய தகவல் கிடைத்தும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'கார்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததுடன், அவ்வப்போது அவருக்கு மயக்கம் வரும் என்றும் தெரிய வந்தது. இதனால் குளிக்க சென்ற அவர் ஏரி தண்ணீரில் மயங்கி விழுந்ததால் இறந்திருக்கலாம்,' என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story