அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது


அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழா  பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
x
தினத்தந்தி 20 July 2023 3:04 AM IST (Updated: 20 July 2023 3:29 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி உள்ளது

ஈரோடு

அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

அந்தியூரில் பழமையானதும் புகழ் பெற்றதுமான குருநாதசாமி கோவில் உள்ளது. கொரோனா காரணமாக இந்த கோவில் திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து குருநாதசாமி, பெருமாள் சாமி, காமாட்சி அம்மன் ஆகிய சாமிகளை சந்தன பேழையில் வைத்து மேளதாளங்கள் முழங்க 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வன கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

பின்னர் அங்கு குருநாதசாமி, பெருமாள் சாமி, காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து வெண்பொங்கல் வைக்கப்பட்டு சாமிக்கு படைத்தனர்.

கொடியேற்றம்

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் வனக்கோவிலில் இருந்து புதுப்பாளையம் மடப்பள்ளிக்கு குருநாதசாமி, பெருமாள் சாமி, காமாட்சி அம்மன் சந்தன பேழையில் வைத்து எடுத்துவரப்பட்டார்கள். 26-ந் தேதி கொடியேற்றப்பட்டது.

அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வன பூஜையும், 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை குதிரை சந்தையுடன் கூடிய தேர்த்திருவிழாவும் நடைபெறும். பூச்சாட்டு விழாவில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கர்நாடகா பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story