முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்க வேண்டும்


முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்க வேண்டும்
x

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் கணபதி தலைமையில் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, இணைத்தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானோர் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறோம். இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலியாக சொந்தவீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்று கடந்தாண்டு கலெக்டரிடம் மனு அளித்தோம். அதன்பேரில் வேலூர் தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வருவாய் ஆய்வாளர் ஏப்ரல் மாதம் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்தார். அதன்பின்னர் சில மாதங்கள் ஆகியும் இதுவரை அடுக்குமாடி குடியிருப்பு வீடு வழங்கவில்லை. எனவே எங்களுக்கு வீடு வழங்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அலுவலக மேலாளர் பாலாஜி அதனை கலெக்டரிடம் அளிப்பதாக தெரிவித்தார்.


Next Story