ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி ஆய்வு
ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி ஆய்வு செய்தாா்.
ஈரோடு
அந்தியூர்
கோவை சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை பார்த்தார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுநாதன், அசோகன், மகேஷ்வரி, கோவிந்தராஜன், கெஜலட்சுமி ஆகியோரிடம் வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story