அரசியல் கட்சியினர் 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


அரசியல் கட்சியினர் 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
x

தேவர் குருபூஜை அன்று அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர் 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. விழாவில் அஞ்சலி செலுத்த வருகைதரும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் வருகிற 21-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story