கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு-29-ந் தேதி நடக்கிறது


கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு-29-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பி.காம்., பி.பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. தாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான (முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறளாளிகள், பழங்குடியினர், அந்தமான் நிக்கோபரை சேர்ந்த பிரிவினருக்கு) சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 29-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கல்லூரியின் www.gacmenkrishnagiri.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வின் போது, இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் (10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அசல் சான்றிதழ்கள்), சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சேர்க்கை கட்டணமாக கலைப்பிரிவுக்கு ரூ.2 ஆயிரத்து 795, அறிவியல் பிரிவிற்கு ரூ.2 ஆயிரத்து 815, கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1,915 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். அனைத்து சான்றிதழ்களும் மூன்று நகல்கள் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story