ரூ.1½ கோடி கடன் கேட்டு விண்ணப்பம்


ரூ.1½ கோடி கடன் கேட்டு விண்ணப்பம்
x

வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தில் ரூ.1½ கோடி கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்துக்கு கடன் வழங்குவதற்கான முகாம் நேற்று மாவட்ட வேளாண்மை இனை இயக்குனர் பாலா தலைமையில் நடந்தது. அப்போது, அதிகப்பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, ஏழு ஆண்டு காலத்துக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் வட்டிக்குறைப்பு, கடன் தொகை ரூ.2 கோடிக்கு மேற்பட்டதாக இருந்தால், ரூ.2 கோடி வரையிலான தொகைக்கு மட்டும் 3 சதவீதம் வட்டிக்குறைப்பு, ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான கடன் உத்திரவாதமும் வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கி பேசினர்.

இதில், மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தில் கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.1 கோடியே 35 லட்சம் கடன் கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்தனர். முகாமில், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அப்துல்ரஹிமான், முன்னோடி வங்கிகளின் மாவட்ட மேலாளர் அருண்பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story