ஓய்வூதியர் பதிவை புதுப்பிக்க வேண்டுகோள்
ஓய்வூதியர் பதிவை புதுப்பிக்க கலெக்டர் லலிதா வலியுறுத்தி உள்ளார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் 9,208 பேர் ஆவர். அவர்களுக்கு 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர நேர்காணல் ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அவர்களில் இதுவரை 7,775 ஓய்வூதியர்கள் மட்டுமே நேர்காணைலை நிறைவு செய்துள்ளனர். இது, 84 சதவீதம் ஆகும். மீதமுள்ள 16 சதவீத ஓய்வூதியர்கள் நேர்காணலை இதுநாள்வரை நிறைவு செய்யவில்லை. அவர்களுக்கான நேர்காணல் வருகிற 30-ந் தேதியுடன் நிறைவடைவதால் ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகங்கள், தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சலக ஊழியர்கள் மற்றும் அரசு இ-சேவை மூலமாக தங்களது பதிவினை நிறைவு செய்யலாம். பதிவினை புதுப்பிக்க தவறிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு அவர்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வலியுறுத்தி உள்ளார்