சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி
நாகூர் தர்காவில் உள்ள சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்
நாகூர்:
நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் உள்ள சின்ன ஆண்டவர் செய்யது முகமது யூசுப் சாஹிப் ஆண்டவருக்கு ஆண்டு தோறும் 3 நாட்கள் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 30 -ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நேற்று நடந்தது. ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப். சந்தனம் பூசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிபு மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story