சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையினர் கடன் பெற   விண்ணப்பிக்கலாம்
x

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புற பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்க்கு மிகாமலும், கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தனிநபர் கடன் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வரை ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இதே போல் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எனவே, இந்த திட்டங்களில் கடன்பெற விரும்பும் இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்த சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் இணைத்து தர வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் இணைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story