பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தெரிவித்தார்.
இளையான்குடி
வேளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளையான்குடி ஒன்றியத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். இதே போல் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பாக மிளகாய், வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பினை ஈடு செய்ய பயிர் காப்பீடு செய்து பயன் பெற வேண்டும். மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பாகவும், வாழை சாகுபடி செய்த விவசாயிகள் பிப்ரவரி 28, 2023-க்கு முன்பாக காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த விளைநிலங்களின் சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு நகல்களை கொண்டு பொது சேவை மையம், வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உரிய முன் மொழிவு படிவுகளை பூர்த்தி செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.