பட்டாசு கடைகள் அமைக்க 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


பட்டாசு கடைகள் அமைக்க 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க விரும்புபவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகின்ற 30-ந்தேதிக்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள். ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான். முகவரி, பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஸ்மார்ட் அட்டை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகளை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், தற்காலிக பட்டாசு கடை உரிமம் கோரி வருகின்ற 30-ந்தேதிக்குள் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது அக்டோபர் 15-ந்தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story