காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்-கலெக்டர் கார்மேகம் தகவல்


காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்-கலெக்டர் கார்மேகம் தகவல்
x

காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம் கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டிற்கு தர்காலிகமாக ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதன்படி இடை நிலை, முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்கள் தொகுப்பூதியத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான விண்ணப்பத்தாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ உரிய கல்வி தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (புதன்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story