அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
x

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்- வேலூர் கலெக்டர் தகவல்

வேலூர்

தொழில்கல்வி பெறுவதற்காக அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழில்பயிற்சி பெறுவதற்கு www.skilltraning.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த பயிற்சி நிலையங்களில் பிட்டர், எலக்ட்ரீசியன், டர்னர், மெஷினிஸ்ட், மோட்டார் வாகன மெக்கானிக், டிராப்ட்ஸ்மென் சிவில் தொழிற்பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன், வெல்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், கார்பென்டர், லெதர் கூட்ஸ்மேக்கர், புட்வேர் மேக்கர் தொழிற்பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஓராண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது.

14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் குறித்த விவரங்களை www.skilltraning.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பயிற்சி கட்டணம் கிடையாது. மேலும் கூடுதல் விவரங்களை வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story