சிறந்த பெண் சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த பெண் சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்
சுதந்திர தினவிழாவில் சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தகுதி வாய்ந்த பெண் சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 7502034646, 8838872443 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story