கிராம தன்னார்வ தொண்டு, சமூக சேவை குறித்த சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்


கிராம தன்னார்வ தொண்டு, சமூக சேவை குறித்த சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
x

கிராம தன்னார்வ தொண்டு, சமூக சேவை குறித்த சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட அளவில் கிராம ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வ தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து 3 மாத சான்றிதழ் படிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வகுப்பு 6 நாட்கள் நேரடி வகுப்புகளாக (கள ஆய்வு உள்பட) மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்படும். மேலும், கிராம அளவில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அங்கன்வாடிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட முன்மாதிரி ஊராட்சிகளுக்கு களப்பயணம் அழைத்து செல்லப்படும். சான்றிதழ் படிப்பிற்கான பாடப்புத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த 3 மாத சான்றிதழ் படிப்பின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப் பணியாளர்கள், கிராம இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சியும், 45 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர கட்டணமாக ஆயிரம் ரூபாயை இணையதளம் வழியாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரை தொடர்பு கொண்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட வள மைய அலுவலரை 9626356596 என்ற செல்போன் எண்கணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story