தொடக்ககல்வி பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தனித்தேர்வர்கள் தொடக்ககல்வி பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) வீ.இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பயிற்சித் தேர்வர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தொடக்ககல்வி பட்டயத்தேர்வு ஜூன் 2023-ல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக வருகிற 13-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 15-ந்தேதி மற்றும் 16-ந்தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தில் ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.100, பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுகட்டணம் ரூ.70 செலுத்தவேண்டும். இத்தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.