வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலனூர், திருப்பூர், பொங்கலூர், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 4 வட்டார மேலாளர்கள் மற்றும் காங்கயம், பல்லடம், பொங்கலூர், குண்டடம், தாராபுரம், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 14 பேர் தற்காலிகமாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வட்டார இயக்க மேலாளர் பணிக்கு ரூ.15 ஆயிரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு 75 மதிப்பெண்களுக்கும், நேர்முகத்தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடக்கும். எழுத்துத்தேர்வு வருகிற 15-ந் தேதியும், நேர்முகத்தேர்வு வருகிற 21-ந் தேதியும் நடக்கும். தகுதி வாய்ந்தவர்கள் இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், அறை எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641604 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971149 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை வருகிற 10-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.