இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்


இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விரும்புபவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

இ-சேவை மையம்

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையத்தை தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்னாளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன் வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கு அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்துக்கு அருகில் வழங்கி வருகிறது.

ஏப்ரல் மாதம் 14-ந்தேதி கடைசிநாள்

இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இந்த திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

இ-சேவை மையம் தொடங்க விரும்புபவர்கள், இ-சேவை வலைதளத்தில் (www.tnesevai.tn.gov.in/www.tnega.tn.gov.in) வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலமாக வழங்கப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

----


Related Tags :
Next Story