நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்


நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சலவை தொழிலில் ஈடுபட்டு வருகிற (ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்திடவும், மேலும் சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story