மானியத்துடன் தொழில் தொடங்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்


மானியத்துடன் தொழில் தொடங்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் உதவி பெற்று சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் உதவி பெற்று சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:-

நிதி ஒதுக்கீடு

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சேவை பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும், உற்பத்தி பிரிவில் ரூ.10 லட்சம் வரையிலான அளவிற்கும் கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவை பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், உற்பத்தி பிரிவிற்கு ரூ.30 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

2022-23-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 216 நபர்களுக்கு ரூ.6.24 கோடி மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பங்களிப்பு திட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டத்திற்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் தங்கள் பங்களிப்பாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மேலும் திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில்கள் தொடங்க நிதி உதவி வழங்கப்படும். எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த ஆர்வமுள்ள தொழில் தொடங்கும் திறமையுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் மற்றும் பெயர் ஆகிவற்றை பதிவு செய்யும் போது ஏஜென்சி என்ற ஆப்ஷன் வரும்போது டி.ஐ.சி. என்று தேர்ந்தெடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை அணுகலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Related Tags :
Next Story