கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x

நாகை மாவட்டத்தில் சமூக பணியாற்றியவர்களுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும்

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில் சமூக பணியாற்றியவர்களுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கபீர் புரஸ்கார் விருது

2022-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்பு துறை மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோர் நீங்கலாக இருக்க வேண்டும்.

அதேநேரத்தில் அரசு பணியாளர்கள் பணி நேரத்தில் அல்லாது பிற நேரங்களில் சமூக பணியாற்றினால் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் அவர்.

இணையதளம்

இந்த விருது கலவரங்களின்போது சமூகப்பணியாற்றியவர்களின் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையிலும் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான htpp:awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை பெற்று தலைமையகம் அனுப்ப வேண்டி உள்ளது. எனவே விண்ணப்பங்களை நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story