கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு வீர,தீர செயல்கள் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு வீர,தீர செயல்கள் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்பனா சாவ்லா விருது
2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது, வீர,தீர செயல்புரிந்த தமிழகத்தை சார்ந்த பெண் ஒருவருக்கு 15.08.2023 அன்று சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படவுள்ளது. இந்த விருதினை பெறுவதற்கு சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும் நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும்.
மேற்படி நற்செயல்கள் செய்தற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கில விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 30.6.2023-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராஜன் தோட்டம், மயிலாடுதுறை. 609001 எனும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ இன்றுக்குள்(28-ந் தேதி) இரண்டு நகல்களில்; (தமிழ்-2 மற்றும் ஆங்கிலம்-2) சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04364-240050, 7401703459 என்ற எண்களில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.