தொழிலாளர் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்


தொழிலாளர் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

தொழிலாளர் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தொழிலாளர் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை உதவி ஆணையர் கூறி உள்ளார்.

தொழிலாளர் நல்லுறவு விருது

தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவிற்கிணங்க, திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் அறிவுரைப்படி தமிழக அரசின் தொழிலாளர்துறை வாயிலாக தொழிலாளர் நல்லுறவு விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு தொழில் நல்லுறவு பரிசுத்திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020 -ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தேர்வு செய்யும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் www.labour.tn.gov.inஎன்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக்கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வருகிற 31-ந்தேதிற்குள் அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்ப கட்டணமாக விண்ணப்பித்தவர், தொழிற்சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் இ-செலான் மூலம் தொகை செலுத்தியஅஞ்சல் செலுத்து சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story