மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்


மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

உணவு பதப்படுத்தப்படும் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர்

உணவு பதப்படுத்தப்படும் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

தொழில்மையம்

இம்மாதம் முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதமரின் உணவு பொருட்கள் உற்பத்தி முறைப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிய மற்றும் விரிவாக்கம் முறையில் அனைத்து உணவு பொருட்கள் சார்ந்த உற்பத்தி தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

25 சதவீதம் அரசு மானியமாக, அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் மற்றும் சிறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

இணைய தளம்

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் அதற்கான இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமானவர்கள் ஆதார் அட்டை, பான்கார்டு, புகைப்படம், குடும்ப அட்டை, திட்டங்களுக்கான விலைப்புள்ளி பட்டியல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கள அலுவலர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தில் உள்ள சந்தேகங்களுக்கு பஞ்சாயத்து யூனியன் அளவிலான கள அலுவலர்களின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கள அலுவலர்கள் பாலகிருஷ்ணன்- காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி 750275 6913, மாரீஸ்வரி - சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை 90558 05793, தியாகராஜன் வத்திராயிருப்பு 99522 09538.

வழிகாட்டுதல்

தொழில் தொடங்கவும் மேம்படுத்துவதற்கான தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப விவரம் வழிகாட்டுதல்களை பெற மாவட்ட தொழில் மையத்தினை 89255 34036 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story