மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக, நகரப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிக்கு 2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொள்ளலாம்.
விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய சான்றுகள், அறிக்கைகள், புகைப்படங்கள் கொண்ட கருத்துருக்களை வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்பித்திட வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.